சச்சின் இல்லாமல் வெற்றி வசப்படுமா?!

அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வெற்றிக்கு சச்சினின் பங்கு அதிகம். இவருக்கு முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்தால் வெற்றி வசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தருவதில் இந்திய அணித்தலைவர் தோனி உறுதியாக உள்ளார்.
இவருக்காக முன்னணி வீரர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதன்படி முதலிரண்டு போட்டிகளில் சேவக், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
புள்ளிவிவரப்படி பார்த்தால் கடந்த 22 ஆண்டுகளில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் தான் வென்றுள்ளது. இதில் சச்சின் பங்கு தான் அதிகம்.
கடந்த 1991-92ம் ஆண்டில் பெர்த் போட்டியில் இந்திய அணி, 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வென்றது. இதில் சச்சின் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்(36 ஓட்டங்கள், 65 பந்து). அடுத்து 12 ஆண்டுகளாக 11 போட்டிகளில் தொடர் தோல்வி. 2003-04ல் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இப்போட்டியில் சச்சின் 86 ஓட்டங்கள் எடுத்தார்.
பின் வந்த மூன்று வெற்றிகளும் கடந்த 2007-08 தொடரில் கிடைத்தது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் 159 ஓட்டங்களை துரத்திய இந்திய அணிக்கு, 54 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார் சச்சின்.
பின் நடந்த முதல் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் 240 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைய, சச்சின் சதம் அடித்து(117 ஓட்டங்கள்) உதவினார். தொடர்ந்து இரண்டாவது இறுதிப் போட்டியில் 91 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
கடந்த 2008 தொடரின் முதல் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தது தான் அதிகம். இதன் பின் இந்த அணிக்கு எதிரான 7 போட்டிகளில் மொத்தமே 37 ஓட்டங்கள் தான் எடுத்தார். எனவே சுழற்சி முறையில் வீரர்களை தெரிவு செய்வது குறித்து தோனி சிந்தித்து தான் முடிவு எடுக்க வேண்டும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now