மின்சாரக் கட்டணத்துடன் மேலதிக எரிபொருள் கட்டணம் அரசாங்கம்

news இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்துடன் மேலதிக எரிபொருள் கட்டணம் ஒன்றை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் டாக்டர் ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்

மின்சார உற்பத்திக்காக எரிபொருள் கொள்வனவுத் தொகை அதிகரித்துள்ளமையை சமாளிப்பதற்காக இந்த மேலதிக  எரிபொருள் கட்டணம் அறவிடப்படுகின்றதாகவும்.உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவடைந்தால் இப்புதிய  கட்டணம் நீக்கப்படும்.

பாவனையாளர்கள் பாவிக்கும் மின்சார அலகுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் அறவிடப்படும். அதன்படி முதல் 30
அலகுகளுக்கு 25 வீதம் -  31 முதல் 60 வரை 35 வீதம்-  60க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 வீதம் என்ற அடிப்படையில் இந்தக் கட்டணம் அமைந்திருக்கும் எனவும் அதேபோன்று தொழிற்சாலைகள்,ஹோட்டல்கள் ஆகியவற்று 15 வீதமும்  பொது சேவைகள் மற்றும் அரசாங்க பல்கலைக் கழகங்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 25 வீதமும் மேலதிக எரிபொருள் கட்டணம் அறவிடப்படும்.

இதேவேளை வணக்கஸ்தலங்கள், அரச வைத்தியசாலைகள், அரசாங்க பாடசாலைகள் மற்றும் வீதி விளக்கு மின்சாரப்
பாவனைக்கு இந்தக் கட்டணம் அறிவிடப்படமாட்டாது.என்று இன்று பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆணைக்குழுவின்   தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now