தென் மற்றும் மத்திய ஆசிய
விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ
பிளக்கிற்கு விசர் பிடித்துள்ளதாக சர்ச்சைக்குரிய பொதுமக்கள் தொடர்பு
அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரங்களில் தலையீடு
செய்வதற்கு பிளக்கிற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்
போது தாம் பிரசன்னமாகியிருந்தால், வேறுவிதமான முடிவுகள் கிடைக்கப்
பெற்றிருக்கும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மின்சார
நாற்காலி தண்டனை விதிக்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக
பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு அரசாங்கம் கலக்கமடைய
வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாலைதீவில் இடம்பெற்று
வரும் குழப்ப நிலைமைகளுக்கு அமெரிக்காவே பொறுப்பு என அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.