மேல் மாகாணத்தில் 300 தமிழ்மொழி மூல ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம்
மேல் மாகாண பாடசாலைகளுக்கான சுமார் 300 தமிழ்மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை இதற்கென தெரிவுசெய்வதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதனடிப்படையில் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் வெற்றிடம் நிலவுகின்ற பாடங்களுக்காக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்த ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்க
நடவடிக்கை மேற்கொள்வதாக மேல் மாகாண முதலமைச்சர் மேலும் கூறினார்.