எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தென் அதிவேக பாதையுடனான பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்த்தன வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதுவரை 400 ரூபாவாக இருந்த தென் அதிவேக பாதை பேருந்து கட்டணம் 470 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பேருந்து கட்டணமானது தனியார் மற்றும் அரச பேருந்துக்களில் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவி;த்துள்ளார்.
இதனிடையே, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்றைய தினம் நடாத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக எதிர்பார்க்கப்படாத வருவாய் கிடைக்க பெற்றதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.