பொய் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ரணில்


போர் முடிவின் பின்னர் நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.
1956 மற்றும் 1977 களில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களை கவிழ்த்ததனைப் போன்று 2012 இலும் அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் நாட்டில் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன. அரசாங்கப் பிரமுகர்கள் மாதாந்தம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வாறான விஜயங்களுக்காக பெருந்தொகை மக்கள் பணம் செலவிடப்படுகின்றது. திருடர்கள், சட்டவிரோத வர்த்தகர்களுடன் அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்கின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now