கேகாலை – ஹெட்டிமுல்ல பகுதியில்
வசிக்கும் பெண் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர
இன்று (14) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். நபர்
ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே இவ்வாறு மரண தண்டனை விதித்து
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி நபர் ஒருவரை
அஸிட் வீசி கொலை செய்ததாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த பெண் இரு நபர்களுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்ததாக வழக்கு
விசாரணையில் தெரியவந்தது. அதில் ஒருவரை அஸிட் வீசி குறித்தப் பெண் கொலை
செய்துள்ளார்.அஸிட் தாக்குதலுக்கு உள்ளானவர் உயிரிழப்பதற்கு முன்னர் திடமான மனநிலையில் இருந்து வாக்குமூலம் அளித்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இக்கருத்துக்களை பரிசீலித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.