இந்தியாவின்
அணித்தலைவர் தோனி நேற்று தனது 200வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
இம்மைல்கல்லை எட்டும் முதல் இந்திய விக்கெட் கீப்பர், துடுப்பாட் வீரர்
என்ற பெருமை பெறுகிறார்.
கடந்த
2004ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான சிட்டகாங் ஒருநாள் போட்டியில்
அறிமுகமானார் தோனி. விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு
நாள் போட்டியில்(2004-05) 123 பந்தில் 148 ஓட்டங்கள் விளாசிய இவர் தன்னை
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளம் காட்டினார்.
இது
தான் இவரது முதல் சதம். அணியின் தலைவர் அந்தஸ்துக்கு விரைவில் உயர்ந்த
இவர், 2007ம் ஆண்டில் டுவென்டி-20 உலக கிண்ணத்தை பெற்று தந்தார். 2011ம்
ஆண்டில் 50 ஓவர் உலக கிண்ணத்தை வென்று காட்டினார்.
தோனியின் சில சாதனைகள்:
1.
2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 299 ஓட்டங்கள் என்ற இலக்கை
துரத்திய போது, 145 பந்துகளில் 183 ஓட்டங்கள் குவித்து வெற்றிபெறச்
செய்தார். இப்போட்டியில் 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்த இவர்,
பேட்டிங்கில் 46 ஓவர்கள் வரை களத்தில் இருந்தார். இதுதவிர ஒருநாள்
கிரிக்கட் அரங்கில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்
இது தான்.
2.
2011ம் ஆண்டிற்கான உலக கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை
நிர்ணயித்த 275 ஓட்டங்களை துரத்திய இந்திய அணி 114 ஓட்டங்களுக்கு 3
விக்கெட்டுகளை இழந்தது. பின் 91 ஓட்டங்கள் எடுத்த தோனி கடைசியில் சிக்சர்
அடித்து கிண்ணத்தை வென்று தந்தார்.
3.
ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு முறை கிண்ணத்தை(2010, 2011)
வென்று தந்தார். இதே போல 2011ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரிலும்
சென்னை அணிக்கு கிண்ணத்தை பெற்று தந்தார்.