விமானங்களுக்கான எரிபொருளுக்கு மேலதிகமாக ஏனைய எரிபொருள் வகைகளையும் இலங்கைக்கு வழங்க ஓமான் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஓமான் நாட்டின் எண்ணெய் வள அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்ததைகளை
அடுத்து இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்துறை அமைச்சின்
செயலாளர் ஏ.எச். எஸ் சமரதுங்க குறிப்பிடுகின்றார்.
விமானங்களுக்கு பயன்படுத்துகின்ற எரிபொருளை மாத்திரமே ஓமானிடமிருந்து
இலங்கை இதுவரை காலமும் இறக்குமதி செய்து வருவதாக அமைச்சின் செயலாளர்
கூறினார்.
எதிர்காலத்தில் தேவை ஏற்படின் ஏனைய எரிபொருள் வகைகளையும பெற்றுக் கொள்வதற்காக மற்றைய நாடுகளுடன் பேச்சுவார்ததைகளை நடத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தேவை ஏற்படின் ஏனைய எரிபொருள் வகைகளையும பெற்றுக் கொள்வதற்காக மற்றைய நாடுகளுடன் பேச்சுவார்ததைகளை நடத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.