அரசின் எரிபொருள் விலை அதிகரிப்பானது
நாட்டின் அனைத்து உழைக் கும் மக்களது வயிறுகளிலும் ஓங்கி அடித்த செயலாகும்.
இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் வீதியில் இறங்கிப் போராடுவதே இதற்கு
ஒரே வழி.
புதியஜனநாயக மாக்சிச லெனினிசக்
கட்சியின் செயலாளர் சி.கா.செந்தில்வேல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக அந்த அறிக்கையில்
மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளை
மறுத்து பாசிசப் பாதையில் பயணித்து வரும் மஹிந்த அரசின் பொருளாதாரக்
கொள்கையின் தோல்வியே எரிபொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே விலை உயர் வுகளால்
வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாது தத்தளித்து வரும் உழைக்கும் மக்களின்
தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அரச தனியார் துறை ஊழியர்கள்
மேலும் அதிகரித்த வாழ்க்கை நெருக்கடிக்குள் அமிழ்த்தப்பட்டுள்ளனர்.
உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கும்
எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்படுத்திய, அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை
எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.இந்த விலை உயர்வுக்கு எதிராக மக் கள்
வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. அவ்வா றான மக்கள்
போராட்டங்களை நாம் ஆதரிப்போம்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக
நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மீதான சுமைகள்
தாங்க முடியாதவாறு சுமத்தப்பட்டுள்ளன.குறிப்பாக மூன்று வீத நாணயப்
பெறுமதிக் குறைப்பானது பொருள் களின் விலையை அதிகரிக்கச் செய் தது. சம்பள
உயர்வு மறுக்கப்பட்டு விலை உயர்வுகள் அதிகரித்துக் கொண் டிருக்கும் சூழலில்
பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலைகளை முறையே 12 ரூபா, 31
ரூபா, 35 ரூபாவாக உயர்த்தியுள்ளமை சகல நிலைகளிலும் மக்கள் மீது
தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.
தனியார் போக்குவரத்துத் துறையினர்
நடத்திய ஒரு நாள் பணிப் புறக்கணிப்புக் காரணமாக இருபது வீத கட்டண
அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால்
அவதிப்படும் மக்க ளுக்கு இக்கட்டண அதிகரிப்பு பெரும் சுமையாகியுள்ளது.
டீசல் விலை உயர்வானது சகல
பொருள்களுக்கும் விலை அதிகரிப்பை இயல்பாகவே கொண்டு வந்துள்ளது. அதனால்
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு விலைகள் மேலும் உயர்த்தப்படும்.அதேபோல்
மண்ணெண்ணைக் கான விலை அதிகரிப்பால் மிகக் குறைந்த வாழ்க்கைத் தரத்தில்
வாழ்ந்து வரும் கிராமப்புற விவசாயிகள், மீனவர்கள், மலையகத் தோட்டத்
தொழிலாளர் களும் பெரும் துன்பமடைவர்.
இன, மொழி, மத பேதங்களுக்கு அப்பால்
அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே
இதற்கு ஒரே மார்க்கமாகும்.இதனைத் தவிர வேறு வழியில் லை என்பதை எமது கட்சி
சுட்டிக் காட்டுவதுடன், அத்தகைய வெகுஜனப் போராட்டங்களை ஆதரித்து அவற்றில்
கலந்து கொள்ளவும் செய்கிறது. என்றுள்ளது.