எதிர்வரும்
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு
இடையிலான கிரிக்கட் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக முன்னாள்
தலைவர் ரிக்கி பொன்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தசைப்பிடிப்பினால் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டேவிட்
வோர்னரை அணித் தலைவராக கொண்டு வர முடியும் எனினும், அவரா அணியை
ஒற்றுமையுடன் நகர்த்தி செல்ல முடியாது போகலாம் என, அவுஸ்திரேலிய கிரிக்கட்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிக்கி பொன்டிங் மீண்டும் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.