சிலாபம், ஆர்ப்பாட்டத்தின் போது
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமான வர்ணகுலசூரிய எண்டனி பர்னாண்டோ
(வயது 38) வின் குடும்பத்தினருக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில்
மனிதாபிமான கொடுப்பனவாக ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட
பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ரூபா ஐந்து இலட்சத்துக்கான காசோலையை
நேற்று வழங்கினார். இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த
மூவருக்கும் தலா 25,000 ரூபா வீதமும், சிறு காயங்களுக்குள்ளான இருவருக்கு
தலா 15,000 ரூபா வீதமும் வட மேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த
வழங்கினார். அத்துடன் உயிரிழந்தவருக்கு மேலும் ஒரு இலட்ச ரூபா
வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாளை நடைபெறவுள்ள எண்டனி
பர்னாண்டோவின் இறுதிக் கிரியைகளுக்கான செலவையும் வட மேல் மாகாண கடற்றொழில்
அமைச்சு பொறுப்பேற்றுள்ளது. வட மேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க,
அமைச்சர் சனத் நிஷாந்த, சிலாபம் நகர சபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி
பிரசன்ன, புத்தளம் மாவட்ட எம். பி. அருந்திக பர்னாண்டோ ஆகியோர் நேற்று
சிலாபம் மகாவெல்ல பகுதிக்கு விஜயம் செய்து மீனவ பிரதிநிதிகளை சந்தித்துப்
பேசினர்.