![]()
ரயில்வே திணைக்களத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே திணைக்களப் பொறுப்பதிகாரிகள்,
கட்டுப்பாட்டாளர்கள், மற்றும் ரயில் சாரதிகள் உட்பட அனைத்து
உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து
ரயில் சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழில் சங்க
ஒன்றியம் தெரிவித்துள்ளது..
அவர்களுக்குரிய கொடுப்பனவை உயர்த்தித்தருவதாக ஏற்கனவே அரசினால் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அதனை இதுவரை அரசாங்கம்
நடைமுறைப்படுத்தவில்லை. இதனைக் காரணம் காட்டியே இன்று பிற்பகல் நான்கு மணி
முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்
ஜானக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களது இந்த பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றும் இன்று மாலை முதல் ரயில்சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.கே.ஆர் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். |
ரயில்வே திணைக்களத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு; ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்
Labels:
இலங்கை