பிரித்தானியாவில் மாணவர் வீசா தொடர்பான சட்டங்களில் மாற்றம்கொண்டு வரப்பட உள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் புதிய சட்ட விதிகள் அமுலுக்கு வரும் எனதெரிவிக்கப்படுகிறது.
மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டங்கள் அமுலுக்குக்கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெய்யான
மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்து கல்விகற்பதற்கும்,
பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில்
சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரித்தானிய எல்லை முகவர்
நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர்
வீசா மூலம் பிரித்தானியாவிற்கு சென்றவர்கள் கல்வியின்பின்னர் இரண்டு
ஆண்டுகள் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், எதிர்காலத்தில் இந்த முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படஉள்ளது.
அதாவது மிகவும் சிறந்த மாணவர்களுக்கு மட்டுமே பிரித்தானியாவில்தொடர்ந்தும் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்களில்மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவ
வீசாக்களுக்காக யாரை அனுமதிப்பது மற்றும் அவர்கள் எவ்வளவு
காலம்தங்கியிருக்க முடியும் போன்ற விடயங்கள் குறித்து எதிர்காலங்களில்
கூடுதல் கவனம்செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.