
இலங்கை தொடர்பில் அமெரிக்கா சமர்பிக்கவுள்ள பிரேரணை இன்று (22) ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் நேற்று (21) உரையாற்றிய இலங்கை பிரதிநிதி மொஹான் பீரிஸ் அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்து உரையாற்றினார்.
இவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த பிரேரணை இலங்கை நேரப்படி சரியாக இன்று மாலை 02.30 மணியளவில் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.