ஐந்து
கிலோ ஹெரோயின் போதைப் பொருளை விமானம் மூலமாக கடத்தி வந்த குற்றச்சாட்டை
ஏற்றுக் கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான்
குணரத்ன நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கல்பிட்டியை சேர்ந்த 51 வயது நபர் ஒருவருக்கே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர் 1989 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை வந்த போது 5 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
