
இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.
இந்தியாவின் நிலைப்பாடானது தமது பிரச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர் கருதுகின்றனர்.
ஆபிரிக்கா, லத்தீன் அnமிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் அமெரிக்காவின் இப்பிரேணைககு ஆதரவாக வாக்களிப்பதற்கு இப்போது தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை, இவ்விடயத்தை நிச்சயமில்லாத மொழிப்பிரயோகத்திற்கு உட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறுமாறு இந்தியாவை ராஜதந்திர ரீதியில் இலங்கை கோரியுள்ளது.
இந்தியாவின் கடைசிநேர தீர்மானத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைந்தபட்சம் மழுங்கச் செய்வதற்கான முயற்சிகளில் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் பிரச்சாரம் செய்துவருவதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டபின் எமக்கு எப்படி ஆதரவளிக்க முடியும் என முன்னர் எம்மோடு இருந்த நாடுகள் பல கேட்கின்றன எனவும் தன்னை இனங்காட்ட விரும்பாத மேற்படி அதிகாரி தெரிவித்தார்.