இந்தியாவின்
குர்கோன் பகுதியிலுள்ள பெண்களை இரவு 8 மணிக்குப் பின் வீட்டில்
தங்கியிருக்குமாறும், வேலைத்தளங்களில் பணிபுரிய வேண்டாமெனவும் அப்பகுதி
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் இரண்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே இந்த விசித்திரமான உத்தரவை நிர்வாகிகள் விடுத்துள்ளனர். 8 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைத்தளங்களில் பணிபுரிய வேண்டுமாயின் தொழிலாளர் திணைக்களத்திடம் குறித்த வேலைத்தளங்கள் அனுமதி பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்கோன் பகுதிக்கான பிரதிக் காவல்துறைப் பணிப்பாளர் பி.சி.மீனா இது தொடர்பான உத்தரவை விடுத்துள்ளார். 8 மணிக்குப் பின்னர் வேலைத்தளங்களில் பணிபுரிய அனுமதி பெறும் போது அப்பெண்களுக்கான போக்குவரத்துப் பொறுப்பையும் குறித்த வேலைத்தளங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு 8 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைத்தளங்களில் பணிபுரிகிறார்களா என்பதைக் கண்டறிய சோதனைகள் நடத்தப்படும் எனவும், வேலைத்தளங்களில் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குர்கோன் பிரதேசம் இந்தியாவின் ஹரியானாவில் அமைந்துள்ளது. ஹரியானாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக அமைந்துள்ள இது, புது டெல்லியிலிருந்து 30 கிலோமீற்றர்கள் தெற்காக அமைந்துள்ளது.