வெள்ளைவான் கடத்தலின்
பின்னணியில் அரசாங்கமே உள்ளதாக ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம் மேலோங்கியுள்ளது அரசாங்கம் தமக்கு எதிரானவர்களை வேட்டையாடவே வெள்ளை வான்களை அனுப்புகின்றது இல்லையென்றால் இராணுவத்தினரை சிவில் உடைகளில் ஆயுதங்களுடன் கடத்துவதற்கு அனுப்புகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக கொலன்னாவை நகரசபை தலைவரை கடத்த மேற்கொள்ளப்பட முயற்சியின் பின்னணியில் அரச படைகள் உள்ளமை அனைவரும் அறிந்த விடயமே. கடத்தல் முயற்சிகள் இடம்பெறும் வேளைகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் வேடிக்கை பார்க்கின்றார்களே தவிர சிவில் நிர்வாகத்தையோ சட்ட ஒழுங்கையோ பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்நிலை எமது நாட்டின் படுமோசமான நிலைமையாகவே அனைவரும் கருத வேண்டும். இராணுவத்தால் சிவில் நிர்வாகத்தில் ஒரு போதும் தலையிட முடியாது. அவசர காலச்சட்டம் போன்றவைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவம் வெள்ளை வானில் வந்து கடத்தல் முறையில் கைது செய்கின்றது என்றால் அது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தேவைகளுக்காக இக் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார். |
வெள்ளைவான் பின்னணியில் அரசாங்கமே;திஸ்ஸ அத்தநாயக குற்றச்சாட்டு
Labels:
இலங்கை