ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி - Vacation Responder

கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் ஈமெயிலை பார்க்க முடியாமல் போகலாம். 
 
அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் ஈமேயில்களுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மெயில் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். நீங்கள் எப்ப்லோலுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான ஈமேயிலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து ஈமேயில்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் ஈமெயில் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
  • முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.
அடுத்து கீழே படத்தில் உள்ளதை போல Settings மாற்றி கொள்ளுங்கள்.  கொள்ளுங்கள்.



First Day - நீங்கள் ஈமெயில் பார்க்க முடியாமால் போகும் தேதி.
Ends - இந்த வசதியை நிருதப்படவேண்டிய நாள்.

பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மெயில் Contact List ல் இருந்து வரும் மெயில்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு ஈமேயில்கள் வந்தால் Automatic Reply அனுப்பாது.

அனைத்தும் தேர்வு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் ஜிமெயில் முகப்பு பக்கத்தில் இருக்கும்.

திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now