 சிரியாவில்
 ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டின் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் 
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை சவூதி அரேபியா அனுப்பிக்கொண்டிருக்கிறது 
என என அரேபிய ராஜதந்திர உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில்
 ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டின் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் 
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை சவூதி அரேபியா அனுப்பிக்கொண்டிருக்கிறது 
என என அரேபிய ராஜதந்திர உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.சுதந்திர சிரிய இராணுவம்' எனக் இக்கிளர்ச்சிப் படையினருக்கான இராணுவ தளபாடங்கள் ஜோர்தான் நோக்கி அனுப்பப்படுகின்றன என தம்மை இனங்காட்ட விரும்பாத மேற்படி ராஜதந்திரி ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளர்.
சிரியாவில் படுகொலைகளை நிறுத்துவதற்கான சவூதியின் முன்முயற்சி இதுவென அவர் கூறியுள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவிலுள்ள தனது தூதரகத்தை சவூதி அரேபியா மூடி இருநாட்களில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் அனுப்பும்இத்தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நெருக்கடி தொடர்பாக ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் சவூதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்தானின் வடக்கு எல்லையில் சிரியா அமைந்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 80,000 சிரிய மக்கள் ஜோர்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
 


