பல ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இதுவரையில் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டடதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, நாளைய தினத்துடன் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவடைகின்றது.
ஹோட்டல் ஊழியர்களின் சுகாதார நிலைமை மற்றும் உணவுப் பொருட்கள், தண்ணீரின் தன்மை தொடர்பிலான சான்றிதழ்களை ஹோட்டல் உரிமையாளர்கள் இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.