யாழில் காலவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு: வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழில் காலவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு:  வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையாழ்.மாவட்டத்தில் காலவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துச் செல்வதாகவும் பொதுமக்கள் மிகவும் விளிப்பான இருக்குமாறு மாவட்ட விலைக்கட்டுப்பாடு அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டு காலவதியான பொருட்கள் விற்றமை, விலைப்பட்டியல் காட்சிக்கு படுத்தாமை, கூடிய விலைக்கு பொருட்கள் விற்றமை தொடர்பாக வர்தகர்கள் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட விலைக்கட்டுப்பாடு அதிகாரி நவரட்ணம் சிவசீலன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், மல்லாகம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் உள்ள வர்த்தகர்கள் மீது இக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 4 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என மேலும் குறிப்பிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now