தேசிய நூதனசாலையில் புராதன வாள்கள், நாணயங்கள் திருட்டு

கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தேசிய நூதனசாலையில் நேற்றிரவு திருடர்கள் குழுவொன்று புகுந்து, புராதன வாள்கள் மற்றும் நாணயங்களை திருடிச்சென்றுள்ளது.

புராதன 7 வாள்களும் சில நாணயங்களும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். குற்றவாளிகளை கண்டறிவதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப்  பணியகமும் கறுவாத்தோட்ட பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now