கொழும்பு - துத்துக்குடி இலவச படகு சேவை விரைவில் ஆரம்பம்

கொழும்பு - துத்துக்குடி இலவச படகு சேவை விரைவில் ஆரம்பம்

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இலவச படகு சேவை மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதலாம் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இச்சேவை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சர்வதேச படகு சேவை 2011, ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பயணிகள் கப்பல், சில தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு பிரச்சினை காரணங்களுக்காக 2011 நவம்பரில் திடீரென இடைநிறுத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக தூத்துக்குடி - கொழும்பு கப்பல் ஆயிரத்து 40 பேர் பயணம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்யப்பட்டு 500 பேர் பயணம் செய்யும் வகையில் சிறிய கப்பல் போக்குவரத்தாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து இலங்கை அரசும், மத்திய அரசு மூலம் தமிழக அரசும் பேசி உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now