ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் போட்டியில்
இலங்கை அணியை பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது. இதனால்
ஆசிய கிண்ணக் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணி தகுதிபெற்றுள்ளது.
மீர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் 232 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடியபோது மழை பெய்ததால் அவ்வணியின் இலக்கு மாற்றப்பட்டு 40 ஓவர்களில் 212 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 37.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
