ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star

உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஜிமெயிலில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். ஜிமெயிலில் ஏதாவது மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம்.
 
 இந்த புதிய வசதியினால் நாம் ஏதாவது ஒரு முக்கியமான மெயிலை அனுப்பி அதற்க்கான பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்போம் துரதிஷ்ட வசமாக இரண்டு நாள் உங்களால் மெயிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்ப்படலாம் அதற்குள் உங்கள் இன்பாக்ஸ் நிரம்பி வழியும் குறிப்பிட்ட அந்த மெயிலுக்கு ரிப்ளை வந்துள்ளதா என்பதை நீங்கள் தேடி கண்டறிய வேண்டும். இந்த சிரமத்தை தவிர்க்க மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு குறிப்பிட்ட Label அல்லது Star பொருத்தி விட்டால் எத்தனை நாள் கழித்து வந்து பார்த்தாலும் அந்த குறிப்பிட்ட லேபிளை மற்றும் Star குறியீட்டை பார்த்து சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த பயனுள்ள வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே பார்க்கலாம்.


உபயோகப்படுத்துவது எப்படி:
  • எப்பொழுதும் போல ஜிமெயிலை திறந்து Compose பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு உங்களுடைய செய்தியை டைப் செய்து விட்டு அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரிகளை கொடுத்து விடவும். 
  • அங்கு labels என்ற புதிய பட்டன் ஒன்று இருக்கும் அதில் உங்களுக்கு விருப்பமான label தேர்வு செய்து கொள்ளுங்கள். அல்லது புதிதாகவும் label உருவாக்கில் கொண்டு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • தேர்வு செய்து கொண்டு பின்னர் Send பட்டனை அழுத்தி உங்கள் ஈமெயிலை அனுப்பி விடுங்கள். 
  • இனி அந்த மெயிலுக்கு ரிப்ளை வந்தால் குறிப்பிட்ட லேபிளில் பார்த்தவுடன் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சிறிய வசதி என்றாலும் ஒரே நாளில் நூற்றுக்கும் மேலான மெயில்கள் வருபவர்களுக்கு இந்த வசதி மிக மிக பயனுள்ள வசதி.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now