
நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்த சந்தேக நபர் ஒருவரது வீட்டினை சோதனை செய்துள்ளனர்.
இதன் போது இறந்த நாயின் தலை மற்றும் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சந்தேக நபர் காட்டு இறைச்சி எனக் கூறி நாய் இறைச்சியை ஒரு கிலோ 350 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்துள்ளார்.
சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள அதேவேளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.