
முஸ்லிம்களின் உரிமைகளை மறுக்கும் அரசாங்கம் பிரச்சினையென்று வரும்போது உதவிகோருகிறதென்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் சவூதி அரேபியாவின்
ஆதரவை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் அமைச்ரொருவர்
செல்வாக்குமிக்க முஸ்லிம் மதத் தலைவர்கள் இருவரை சவூதிக்கு அழைத்துச்
சென்றுள்ளார். இது தொடர்பாக கருத்து தெவிக்கையிலேயே மேல் மாகாண பை
ஐதே.கட்சி உறுப்பினரும், மத்திய கொழும்பு இணை அமைப்பாளருமான
முஜிபுர்ரஹ்மான் இதனைத் தெவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு ஏதாவது
பிரச்சினையென்றால் முஸ்லிம் சமுகம் நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க
முன்னணியில் நிற்க வேண்டும்.
ஆனால், இன்றைய ஜெனீவாவில் அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு
எதிராகவே பிரச்சினை உருவாகியுள்ளது. எனவே, இவ் அரசியல் பிரச்சினைக்காக
மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை வீதியில் இறக்கி போராட்டங்களை
நடத்துவது பிழையான அணுகு முறையாகும்.
அத்தோடு செல்வாக்குமிக்க இஸ்லாமிய மதத் தலைவர்களை ஜெனீவாவிற்கு அழைத்துச் சென்றிருப்பதும் பிழையான செயற்பாடாகும்.
ஜெனீவா செல்வதற்கு முன்பு அலரிமாளிகைக்கு சென்று சுனாமியால்
பாதிக்கப்பட்ட 600 முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன்
கட்டப்பட்ட வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்திற்குள்ளிருக்கும் பேரினவாதச் சக்திகளுக்கு அஞ்சி இவ்வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாதுள்ளன.
அத்தோடு பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய உடை அணிய தடை விதிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் வரலாற்று ரீதியான பள்ளிவால் உடைக்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு விதங்களில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
எனவே, அரசாங்கத்தின் அரசியல் தேவைக்காக ஜெனீவா செல்வதை விட
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் மதத் தலைவர்கள் அலரி மாளிகைக்கு
செல்ல வேண்டுமென்றார்.