முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
குமாரதுங்க அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில், அவருடன்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள
சமரவீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளதாக மிகவும் நம்பகரமான தரப்புத்
தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
இந்தியாவில் நடைபெறும் விசேட மாநாடொன்றில்
கலந்துகொள்வதற்காகவே இவர்கள் இந்தியா செல்கின்றனர். எனினும்,
கருத்தரங்கின் பின்னர் இந்திய உயர்மட்ட அரச அதிகாரிகளை எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில்
முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைப்பொன்றின் முதலாவது மாநாடு ஏப்ரல் 07ஆம்
திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.