ஜிமெயில் மற்றும் கூகுள்+ தளங்களை திறக்காமலே நண்பர்களுடன் சாட் செய்ய [குரோம்]

இணையத்தில் ஜிமெயில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மெயில் சேவையாகும் மற்றும் கூகுள்+ தளமும் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமாகும். இவை இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான வசதி நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் chat வசதியாகும். இதுவரை இந்த தளங்களுக்கு சென்று தான் அதில் ஆன்லைனில் உள்ள நண்பர்களிடம் சாட் செய்து வந்தோம் இனி நீங்கள் சாட் செய்ய அந்தந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அந்த தளங்களை திறக்காமலே ஜிமெயில் மற்றும் கூகுள்+ நண்பர்களுடன் எப்படி சாட் செய்வது என்று இன்று காணலாம். தற்பொழுது குரோம் பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.
  • முதலில் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து Chat for Google என்ற நீட்சியை  நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
  • நீட்சி உங்கள் உலவியில் இணைந்தவுடன் குரோம் பார் அல்லது system tray பகுதியில் உள்ள ஐகானை க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் ஏற்க்கனவே ஏதேனும் கூகுள் ஐடியில் நுழைந்து இருந்தால் அந்த கணக்கில் உள்ள நண்பர்களை காட்டும். இல்லை எனில் கூகுள் கணக்கில் நுழைய Sign In வசதியை காட்டும்.
  • அதில் நுழைந்து உங்கள் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம். 
டாஸ்க்பாரில் தெரியும் ஐகானை மறைக்க:
Chat விண்டோவில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் Show system tray icon பகுதியில் உள்ள டிக் மார்க் நீக்கிவிட்டால் டாஸ்க்பாரில் இருந்து அந்த ஐகான மறைந்து விடும்.
chat வசதியை போலவே கூகுள்+ உள்ள hangout வசதியும் உள்ளது என்கது இதன் கூடுதல் சிறப்பு.

இந்த நீட்சியை டவுன்லோடு செய்ய - Chat for Google
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now