மாதாந்தம் 7500 ரூபாவுக்குள் மூன்று பேர் கொண்ட குடும்பம் வாழ்க்கை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என புதியஇடது சாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை- கல்கிஸை மாநகர சபைத் உறுப்பினருமான கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடரர்பாக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு தான் ஏற்கெனவே அறிவித்துள்ளதாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
'பிச்சைக்காரர்கள் போல் வாழ்வதற்கு மக்களுக்கு கற்பிக்க அமைச்சர் முயற்சிக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக நான் இந்த விவாதத்தில் பங்குபற்ற தீர்மானித்தேன்' என கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ன தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பாக நாம் முன்னர் வெளியிட்ட செய்தி :
7500 ரூபா விவகாரம்: பகிரங்க விவாதத்திற்கு பந்துல தயார்