இந்தியாவிலேயே
உருவாக்கப்பட்ட "ரிசாட் - 1' என்கிற பூமியைத் துல்லியமாகப் புகைப்படம்
எடுக்கும் திறன் கொண்ட அதி நவீன கண்காணிப்பு செயற்கைக் கோளை வரும் 20-ம்
தேதி விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
காலநிலை எப்படியிருந்தாலும், பகல் - இரவு நேரங்களிலும், மேகங்களை ஊருடுவியும் பூமியைத் துல்லியமாக படமெடுத்து அனுப்பும் திறன் கொண்டது இந்தச் செயற்கைக்கோள். ரிசாட் வரிசையில் இந்தியாவிலேயே தயாரான முதலாவது செயற்கைக் கோள் இதுவாகும்.
ஏற்கெனவே இஸ்ரேலிடமிருந்து ரூ. 550 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட ரிசாட் - 2 செயற்கைக்கோள் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ரிசோர்ஸ்சாட்-2 என்கிற மற்றொரு செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த நிலையில், வரும் 20-ம் தேதி ரிசாட்-1 விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 20-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தது பற்றிக் குறிப்பிட்ட இஸ்ரோ அதிகாரி ஒருவர், "அது எங்களுக்கு அதிர்ஷ்டமான நாள்' என்று தெரிவித்தார்.
1850 கிலோ எடையுள்ள இந்தச் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி - சி19 என்கிற ஏவுவாகனம் விண்ணுக்கு கொண்டு செல்கிறது.
ஏற்கெனவே விண்ணில் செயல்பட்டு வரும் ரிசாட் - 2, முழுக்க முழுக்க பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கானது. ஆனால், ரிசாட் - 1, வேளாண்மை, நீர்வள மேலாண்மை போன்றவற்றுக்குப் பயன்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரோவில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான சர்ச்சைகள், அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளால் இந்த செயற்கைக்கோள் ஏவப்படுவது சில மாதங்கள் தாமதமானது