
யுத்தம் முடிந்து மூன்றாவது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசாங்கம் அதிக வரிச் சுமையை மக்கள் தலையில் சுமத்தியுள்ளதென அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குடும்ப வாகனமாக பொது மக்கள் பயன்படுத்தி வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வரியையே அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்த மக்கள், இன்று அரசாங்கத்தின் அநாவசிய செலவுகளுக்கு நட்டஈடு செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புது வருடத்தின் பின் பால் மா மற்றும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை கண்டிப்பதாகவும் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.