நாளைய தினத்துக்காக இன்று மின்சக்தியை பாதுகாப்போம் என்ற, மின்வலு மற்றும்
எரிசக்தி அமைச்சின் திட்டத்திற்கு சமனான புதிய திட்டம் ஒன்று மின்
பாவனையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி மார்ச் மாதத்தில் பாவனை செய்ததைவிட எதிர்வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் 10 சதவீதம் மின்சாரத்தை குறைத்து பாவித்தால் 50 சதவீத மின்கட்டண கழிவை பெற முடியும்.
மேலும் 20 சதவீதம் குறைத்து பாவனை செய்தால் ஒரு மாதத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பங்குபற்ற மின் பாவனையாளர்கள் குறுந்தகவல் மூலம் தம்மை பதிவு செய்து கொள்ளலாம்.
நீங்கள் இலங்கை மின்சார சபை பாவனையாளர் என்றால் L என டைப் செய்து இடைவெளி விட்டு இலங்கை மின்சார சபையின் உங்கள் கணக்கு இலக்கத்தை குறிப்பிட்டு 0114 338338 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பவும்.
லெகோ மின்பாவனையாளர்களாக இருந்தால் esc என டைப் செய்து லெகோ மின் பாவனை இலக்கத்தை குறிப்பிட்டு 0714 643643 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.