தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு புலிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு புலிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான செய்திக்கு இந்தியா மறுப்புஇந்தியாவில் பயிற்சி பெற்ற 150 பேர் அடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளார்கள் என வெளியாகியுள்ள செய்தியை இந்தியா மறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற குழுவினர் இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பிழையானதும் அடிப்படை அற்றதும் என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தாகிகராலயம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தாகிகராலயம் இன்று (02) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ஆயுதப் பயிற்சி பெற்று 150 விடுதலைப் புலிகள் மீனவர்கள் என்ற போர்வையில் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும், நடமாடி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 3 ரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சி முடித்த 150 தீவிரவாதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பதுங்கி நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை உளவுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதென கூறப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சமர முயற்சிகளை கெடுப்பதே அவர்களின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் திருகோணமலையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இச்செய்தி கசிந்துள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு இந்தியாவுக்கு தப்பியோடிதாகவும், தமிழகத்தில் பயிற்சி பெற்று மீனவர்கள் போர்வையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாகவும் அந்த 3 பேர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடந்த பல கொலைகளுக்கு இவர்கள் காரணமாக இருக்கலாம் என்று இலங்கை உளவுத்துறை சந்தேகிக்கிறது.

அந்த 3 பேருக்கும் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அவர்கள் தீவிரவாத விசாராணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் உடல் அருகே ஒரு துண்டுச்சீட்டில் "துரோகிகளுக்கு மரணம். நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் - விடுதலைப் புலிகள்" என்று எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிழக்குப் பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் புலிகளை கைது செய்ய படை தரப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now