கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்த இளம் ஜோடி ஒன்று இந்துருவ பகுதியில்
உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தொடர்பான
அதிர்ச்சித் தகவல்கள் கொஸ்கொட பொலிஸ் நிலைய பொலிஸாரால் சேகரிக்கப்பட்டு
உள்ளன.
தற்கொலையின் பின்னணி குறித்த விபரங்கள் வருமாறு:
இருவரும் கடுவெலவில் பொம்மிரிய என்கிற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தவர்கள்.
ஆணின் பெயர் துஸார குணதிலக. வயது 36. பெண்ணின் பெயர் சமிலா ஜயசிங்க. வயது 27.
சமிலாவின் அக்காவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தந்தை ஆனவர்
துஸார. முதல் குழந்தைக்கு வயது 4. மற்ற குழந்தைக்கு வயது 04 மாதங்கள்.
துஸாரவுக்கும் சமிலாவுக்கும் இடையில் இரகசிய காதல் இருந்து வந்து
இருக்கின்றது. சமிலாவின் அக்கா இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்கின்ற
தறுவாயில் இக்காதல் கிளைமாக்ஸை அடைந்து விட்டது. துஸாரவின் மனைவி இக்கள்ளக்
காதல் தொடர்பு குறித்து கேள்விகள் கேட்கலானார். நீண்ட விவாதம் நடத்தி
இருக்கின்றார். தொடர்ந்து உறவினர்கள் பலருக்கும் இக்கள்ளக் காதல் தொடர்பு
தெரிய வந்து விட்டது.
இதைத் தொடர்ந்து கள்ளக் காதலர்கள் இருவரும் மிகவும் தர்மசங்கடத்துக்கு
உள்ளாக நேர்ந்தது. கள்ளக் காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டு வருகின்றார்கள்
என்று உறவினர்களுக்கு உறுதிமொழி கொடுத்து இருக்கின்றார்கள். தொடர்பை
முடிவுறுத்தி விட்டார்கள் என்பது போல உறவினர்களுக்கு காட்டிக் கொண்டார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.
சமிலா கண்டியில் குண்டலசலவை சொந்த இடமாக கொண்டவர். ஆனால் வேலை
கொழும்பில். இதனால்தான் தமக்கையின் வீட்டுக்கு வந்து தங்கி
இருந்திருக்கின்றார். அப்போதுதான் கள்ளக் காதல் ஏற்பட்டு இருக்கின்றது.
எனவே கள்ளக் காதலை நிரந்தரமாக முடிவுறுத்த வேண்டுமானால் சமிலா வேலையில்
இருந்து நிற்க வேண்டும், ஊருக்கு திரும்ப வேண்டும் என்று சகோதரி உட்பட
உறவினர்கள் விடாப்பிடியாக நின்று கொண்டனர்.
ஆனால் கடந்த வியாழக்கிழமை இருவரும் சமிலாவின் அக்காவிடம்
மாட்டுப்பட்டுக் கொண்டனர். தொடர்ந்து இருவருடன் பலத்த சண்டை நடத்தி
இருக்கின்றார் சமிலாவின் அக்கா. இதனால் வீட்டில் பாரிய பூகம்பமே வெடித்தது.
மறுநாள் வேலைக்கு என்று சொல்லி கள்ளக் காதலர்கள் இருவரும் வீட்டில்
இருந்து தனித் தனியாக புறப்பட்டு இருக்கின்றனர்.
விடயம் அறிந்து வந்து இருக்கக் கூடிய உறவினர்களுக்கு வீட்டுக்கு
திரும்பிச் செல்கின்றபோது பதில்கள், விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்
என்று ஊகித்துக் கொண்டனர். எனவே இருவரும் தொலைபேசியில் நீண்ட உரையாடல்
நடத்தி இருக்கின்றனர். வீட்டுக்கு திரும்பிச் செல்வதில்லை என்றும் ஒன்றாக
தற்கொலை செய்து உயிரை மாய்க்க வேண்டும் என்றும் முடிவுக்கு
வந்திருக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலை ஹோட்டலை புக் பண்ணி தங்கி இருக்கின்றனர். மறுநாள் ஹோட்டல் அறையில் எவ்வித அமளியும் இருக்கவில்லை.
இவர்கள் காலை 11. 00 அளவில் அறையை விட்டு வெளியேற வேண்டும். இந்நிலையில்
ஹோட்டல் சிப்பந்திகள் அறைக் கதவை தட்டிப் பார்த்தனர். எவ்வித பதிலும்
கிடைக்காமையால் பல்கணிக்கு சென்று பல்கணியின் ஜன்னல் ஊடாக அறைக்குள்
பார்த்தார்கள். தூக்கிட்டு இருந்தவர்களை கண்டு கொண்டனர்.
போர்வையை கயிறாக்கி கூரையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து இருக்கின்றது கள்ளக் காதல் ஜோடி.
படங்கள் : Gossip lanka