இ.போ.ச பஸ்களின் எண்ணிக்கையை 5000 இருந்து 7000 மாக உயர்த்த திட்டம்


போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் எண்ணிக்கையை ஏழாயிரம் வரை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 
நாடுமுழுவதும் சுமார் ஐயாயிரம் பஸ்களே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஷி வெல்கம குறிப்பிட்டார்.

நடைமுறையிலுள்ள நேர அட்டவணைகளின் பிரகாரம் ஏழாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலதிக பஸ்களை கொள்வனவு செய்வதன் மூலம், தனியார் பஸ் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக சஷி வெல்கம மேலும் கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now