ஐ.நாவில் இலங்கையை ஆதரிக்க இந்தியா முடிவு ?

ஐ.நாவில் இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முடிவு ?

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

´குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு´ எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருப்பதன் மூலம், இலங்கையைக் காக்க இந்தியா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்ற என்பது இலங்கைக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 19வது கூட்டம் பெப்ரவரி 27-ம் திகதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்தினர் புரிந்த போர்குற்றம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது.

போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மனித உரிமைக் குழுக் கூட்டத் தொடரில் இந்தியா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் "குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்´ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"நோக்கம் சார்ந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட, அரசியல் கலவாத, மோதல்களை ஆதரிக்காத கொள்கைகளில்தான் மனித உரிமைக் குழுவின் வலிமை அடங்கியிருக்கிறது. இந்தப் பண்புகளைக் காக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்" என்று இந்தியா கூறியிருக்கிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now