இந்திய
கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான
மொஹமட் அஸாருதீனுக்கு டில்லியிலுள்ள நீதிமன்றமொன்று பிணையில் வெளிவர
முடியாத ஆணையொன்றை பிறப்பித்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடிய
நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.
காசோலையொன்று திரும்பி வந்தமை தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி
அஸாருதீன் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே இன்று வியாழக்கிழமை இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஸாருதீன் உத்தரபிரதேச தேர்தலில் ஈடுபட்டிருப்பதால் விதிவிலக்கு
அளிக்கக்கோரி அவரின் வழக்குரைஞர் நீதிமன்றில் கோரினார். எனினும்,
அக்கோரிக்கையை நீதிபதி விக்ரந்த வைத் நிராகரித்து மார்ச் 7 ஆம் திகதி
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்ற பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை
பிறப்பித்தார்.
மும்பையில் சொத்தொன்றை வாங்கி விற்பது தொடர்பாக 1.5 கோடி இந்திய ரூபா
பெறுமதியான இரு காசோலைகளை மொஹமட் அஸாருதீன் வழங்கியதகாவும் ஆனால் அவை
வங்கியிலிருந்து திரும்பி வந்ததாகவும் கூறி வழக்குத் தொடுத்துள்ளார்.
இவ்வழக்கில் அஸாருதீன் இன்று முதலாம் திகதி ஆஜராக வேண்டுமென பெப்ரவரி 18 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.